தனித்தமிழ் பற்றாளர்கள் ‘Oxygen’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழில் “தீயகம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் (“மொழிப்பார்வைகள்’ பக்கம். 59). ஆக்ஸிஜனின் பல பண்புகளில் (எரிவது சம்பந்தப்பட்ட) ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டு “தீயகம்’ என்ற சொல்லை உருவாக்கி பயன்படுத்த இவர்கள் விரும்புகிறார்கள். ‘Oxygen’ என்ற ஆங்கிலச்சொல்லின் முதல் எழுத்தான ‘O’ அது சம்பந்தப்பட்ட சமன்பாடுகளில் குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது..
‘Oxygen’ என்ற ஆங்கில மொழி சொல்லுக்கு “தீயகம்’ என்று ஒரு சொல் உருவாக்க தொல்காப்பியத்தின் எந்த இலக்கண விதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது எனக்கு தெரியவில்லை. தொல்காப்பியர் பயன்படுத்திய “சூத்திரம்’ என்ற வடசொல்லானது, “தீயகம்’ உருவான முறையில் உருவாகவில்லை.
ஆனால் வடசொல் தொடர்பான தொல்காப்பியரின் இலக்கணத்தைப் பின்பற்றி ஆங்கிலச் சொல்லைத் தமிழில் பயன்படுத்த பின்வரும் சூத்திரத்தை நாம் உருவாக்கலாம்.
” ஆங்கிலச்சொல் – கிளவி ஆங்கில எழுத்து ஒரீஇ,எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே.சிதைந்தன வரினும், இயைந்தன வரையார்”
இதன்படி, ‘Oxygen’ என்ற ஆங்கிலச் சொல்லின் ஒலியில் சிறிய சிதைவுடன் ‘”ஆக்ஸிஜன்’ என்ற தமிழுக்கான ஆங்கிலச் சொல்லை உருவாக்கி தமிழில் பயன்படுத்தலாம். ‘Oxygen’ சம்பந்தப்பட்ட பல பண்புகளில் ஒன்றை மட்டும் முதன்மைப் படுத்தி, மாணவர்களுக்கு தவறுதலான புரிதலை ஏற்படுத்துவது, சமன்பாடு குறியீடுகளை விளங்கிக் கொள்வதில் சிரமப்படுவது போன்ற “தீயகம்’ என்ற சொல்லால் எற்படும் குறைபாடுகள் “ஆக்ஸிஜன்’ என்ற சொல்லால் எற்படாது என்பது என் கருத்தாகும்.
by செ. அ. வீரபாண்டியன் (டாக்டர். வீ)
3 weeks ago
இக்கலைக்களஞ்சியத்தின் நோக்கம் தமிழ் இலக்கிய விமர்சனம் குறித்ததான அறிவை இளம் வாசகர்களும், இலக்கிய மாணவர்களும் எளிதாகப் பெறும் வகையில் ஓரிடத்தில் தொகுத்துத் தருவதுதான். இயன்ற வரையில் அவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் எளிமையான மொழியில் முறையில், தரப்பட்டுள்ளது.
by முதன்மை ஆய்வாளர்: வேதசகாய குமார்
1 month ago
To qualify as a classical tradition, a language must fit several criteria: it should be ancient, it should be an independent tradition that arose mostly on its own not as an offshoot of another tradition, and it must have a large and extremely rich body of ancient literature. Unlike the other modern languages of India, Tamil meets each of these requirements. It is extremely old (as old as Latin and older than Arabic); it arose as an entirely independent tradition, with almost no influence from Sanskrit or other languages; and its ancient literature is indescribably vast and rich.
It seems strange to me that I should have to write an essay such as this claiming that Tamil is a classical literature — it is akin to claiming that India is a great country or Hinduism is one of the world’s great religions. The status of Tamil as one of the great classical languages of the world is something that is patently obvious to anyone who knows the subject. To deny that Tamil is a classical language is to deny a vital and central part of the greatness and richness of Indian culture.
ஜியார்ஜ் ஹார்ட் — http://tamil.berkeley.edu/tamil-chair/letter-on-tamil-as-a-classical-language
கபிலரின் குறிஞ்சிப் பாட்டு + மலர்களின் படங்கள்
4 months ago
பல குறுந்தொகைப் பாடல்களைக் கண்முன் நிறுத்தும் படங்கள்
கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே-
எம் இல் அயலது ஏழில் உம்பர்,
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே
4 months ago
அறம் – ஜெயமோகன்; காவல் கோட்டம் – சு.வெங்கடேசன்; நெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்; ஆழிசூழ் உலகு – ஜேடிகுரூஸ்; வண்ண நிலவன் கதைகள் – சந்தியா பதிப்பகம்; தாயார் சந்நிதி – சுகா; கலங்கிய நதி – பி.ஏ.கிருஷ்ணன்; ஆறாவடு – சயந்தன்; போரும் வாழ்வும் – தால்ஸ்தோய்; அசடன் – தாஸ்தாவஸ்கி
2012 புத்தகக் காட்சியில் வாங்கி வாசிக்கவேண்டியவை — நாஞ்சில் நாடன் பரிந்துரை (விகடனில்)
Tamil Magazines & Books Online Store
4 months ago
தமிழ் சார்ந்த எழுத்துலகில் இணையத்தில் கிடைப்பதில், ஒழிகையில் நான் வாசிக்க, விவாதிக்க உகந்தவை என்பவைகளின் சுருக்கங்கள், சுட்டிகள்; மேற்கோள்கள், மேலோட்டங்கள்.
என் விரிவான கட்டுரைகள் அ(றி)வியல் தளத்தில்…