டம்ப்ளரில் A(ri)viyal

May 08

ஒரீஇ – சில ஐயங்கள் | Sangatham -

தனித்தமிழ் பற்றாளர்கள் ‘Oxygen’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழில் “தீயகம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் (“மொழிப்பார்வைகள்’ பக்கம். 59). ஆக்ஸிஜனின் பல பண்புகளில் (எரிவது சம்பந்தப்பட்ட) ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டு “தீயகம்’ என்ற சொல்லை உருவாக்கி பயன்படுத்த இவர்கள் விரும்புகிறார்கள். ‘Oxygen’ என்ற ஆங்கிலச்சொல்லின் முதல் எழுத்தான ‘O’ அது சம்பந்தப்பட்ட சமன்பாடுகளில் குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது..

‘Oxygen’ என்ற ஆங்கில மொழி சொல்லுக்கு “தீயகம்’ என்று ஒரு சொல் உருவாக்க தொல்காப்பியத்தின் எந்த இலக்கண விதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது எனக்கு தெரியவில்லை. தொல்காப்பியர் பயன்படுத்திய “சூத்திரம்’ என்ற வடசொல்லானது, “தீயகம்’ உருவான முறையில் உருவாகவில்லை.

ஆனால் வடசொல் தொடர்பான தொல்காப்பியரின் இலக்கணத்தைப் பின்பற்றி ஆங்கிலச் சொல்லைத் தமிழில் பயன்படுத்த பின்வரும் சூத்திரத்தை நாம் உருவாக்கலாம்.

” ஆங்கிலச்சொல் – கிளவி ஆங்கில எழுத்து ஒரீஇ,எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே.சிதைந்தன வரினும், இயைந்தன வரையார்”

இதன்படி, ‘Oxygen’ என்ற ஆங்கிலச் சொல்லின் ஒலியில் சிறிய சிதைவுடன் ‘”ஆக்ஸிஜன்’ என்ற தமிழுக்கான ஆங்கிலச் சொல்லை உருவாக்கி தமிழில் பயன்படுத்தலாம். ‘Oxygen’ சம்பந்தப்பட்ட பல பண்புகளில் ஒன்றை மட்டும் முதன்மைப் படுத்தி, மாணவர்களுக்கு தவறுதலான புரிதலை ஏற்படுத்துவது, சமன்பாடு குறியீடுகளை விளங்கிக் கொள்வதில் சிரமப்படுவது போன்ற “தீயகம்’ என்ற சொல்லால் எற்படும் குறைபாடுகள் “ஆக்ஸிஜன்’ என்ற சொல்லால் எற்படாது என்பது என் கருத்தாகும்.

by செ. அ. வீரபாண்டியன் (டாக்டர். வீ)

இந்திய பாரம்பரிய அறிவியல் -

by பிரகாஷ் தென்கரை:

Apr 28

“துறை சார்ந்த சமாளிப்பு என்பது ஒன்று; இந்தத் துறை சார்ந்த வல்லமை என்பது மற்றொன்று. பெரும்பாலும் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் - அது வைத்தியமாக இருக்கலாம், அல்லது பொறியியலாக இருக்கலாம் - அல்லது வணிகமாக இருக்கலாம் அல்லது சட்டமாக இருக்கலாம் - அந்த துறையைச் சேர்ந்தவர்கள் அதிக அளவுக்கு அந்தந்த துறையைச் சார்ந்த உத்திகள், பந்தாக்கள், சொற்றொடர்கள் ஆகியவற்றைக் கற்று, அதில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர் போன்ற பாவனையைப் பிறரிடம் உருவாக்கி அதன் மூலம் வாழ்க்கையைச் சமாளித்துக் கொண்டிருக்கக்கூடிய கோலத்தைத்தான் அதிக அளவில் பார்க்க முடிகிறது.” —

அழியாச் சுடர்கள்: ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை-சுந்தர ராமசாமி

முக்கியமான பேட்டி/உரையாடல்; தமிழர் தழ்வுமனப்பான்மை, தமிழ் எழுத்து, எழுத்தாளன், துறை வல்லமை என பல விஷயங்களை பற்றி அருமையான விளக்கங்கள் வாதங்கள்.

Encyclopedia Tamil Criticism -

இக்கலைக்களஞ்சியத்தின் நோக்கம் தமிழ் இலக்கிய விமர்சனம் குறித்ததான அறிவை இளம் வாசகர்களும், இலக்கிய மாணவர்களும் எளிதாகப் பெறும் வகையில் ஓரிடத்தில் தொகுத்துத் தருவதுதான். இயன்ற வரையில் அவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் எளிமையான மொழியில் முறையில், தரப்பட்டுள்ளது.

by முதன்மை ஆய்வாளர்: வேதசகாய குமார்

Jan 27

இலக்கியம் விற்பனைக்கு

சந்து பொந்துக்குள் வெறும் தட்டியில் பெயர்ப்பலகை வைத்திருக்கும் உணவகங்களில் மக்கள் வரிசையில் காத்திருப்பது எப்படி? ஏகோபித்த ஆதரவு வரலாறு காணாத வெற்றி என்று போஸ்டரடித்து சினிமாக்களையே ஓட்ட முடியாதபோது, வெறும் எண்ணிக்கையக் கூட்டிச்சொல்லியா இலக்கியத்தை விற்றுவிட முடியும்? அல்லது விற்பனை எண்ணிக்கையை வைத்து நிர்ணயிக்கக்கூடியதா தரம்?இலக்கியம் கூவி விற்பதல்ல, தேடி வாங்குவது. வாசக ருசியால் பரவுவது, வாய்க்கு ருசியாகத் தந்தால் தட்டியில்கூடப் பெயர் தேவையில்லை என்பதே என்றைக்குமான சத்தியம்.
தமிழில் இலக்கிய வெற்றி என்பது தரத்திலிருந்து நகர்ந்து, எண்ணிக்கையின் ஏணியில் ஏறத்தொடங்கியது எப்போது? இதில் இணையத்து நுணிப்புல் மேயலின் பங்கு என்ன?
மேலும்…

Jan 18

செம்மொழி

To qualify as a classical tradition, a language must fit several criteria: it should be ancient, it should be an independent tradition that arose mostly on its own not as an offshoot of another tradition, and it must have a large and extremely rich body of ancient literature.  Unlike the other modern languages of India, Tamil meets each of these requirements.  It is extremely old (as old as Latin and older than Arabic); it arose as an entirely independent tradition, with almost no influence from Sanskrit or other languages; and its ancient literature is indescribably vast and rich.

It seems strange to me that I should have to write an essay such as this claiming that Tamil is a classical literature — it is akin to claiming that India is a great country or Hinduism is one of the world’s great religions.  The status of Tamil as one of the great classical languages of the world is something that is patently obvious to anyone who knows the subject.  To deny that Tamil is a classical language is to deny a vital and central part of the greatness and richness of Indian culture.

ஜியார்ஜ் ஹார்ட் — http://tamil.berkeley.edu/tamil-chair/letter-on-tamil-as-a-classical-language

Jan 17

[…] Among other organizations, the Berkeley Tamil Chair is listed in the book as a phenomenon that is “subversive” to India and Hinduism. Very well, let’s look at some of the projects of our students.

[…] To suggest that the Tamil Chair is in any way involved with “breaking India” is libelous. Its purpose and its mission have been to bring to light the great Tamil classics, many of which are among the greatest works of Hinduism and of Indian culture. Unlike some, the Tamil program at Berkeley does not try to make itself taller by cutting off the heads of others. Rather, it wishes to spread awareness of the great contributions made by the Tamils to world culture, to India—and to Hinduism.

George Hart, Tamil Chair, University of California, Berkeley

” —

“Breaking India” — with friends like this….

http://tamil.berkeley.edu/breaking-india-with-friends-like-this

[உடையும் இந்தியா புத்தகத்தில் இடம்பெறும் ஒரு அவதானிப்பிற்கு ஹார்ட் பதிலுரையின் பகுதி]

99 தமிழ் மலர்கள் -

கபிலரின் குறிஞ்சிப் பாட்டு + மலர்களின் படங்கள்

குறுந்தொகை பாடல் காட்சி -

பல குறுந்தொகைப் பாடல்களைக் கண்முன் நிறுத்தும் படங்கள்

கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே-

எம் இல் அயலது ஏழில் உம்பர்,

மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி

அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த

மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே

வாசிக்க, புத்தகங்கள்

அறம் – ஜெயமோகன்; காவல் கோட்டம் – சு.வெங்கடேசன்; நெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்; ஆழிசூழ் உலகு – ஜேடிகுரூஸ்; வண்ண நிலவன் கதைகள் – சந்தியா பதிப்பகம்; தாயார் சந்நிதி – சுகா; கலங்கிய நதி – பி.ஏ.கிருஷ்ணன்; ஆறாவடு – சயந்தன்; போரும் வாழ்வும் – தால்ஸ்தோய்; அசடன் – தாஸ்தாவஸ்கி

2012 புத்தகக் காட்சியில் வாங்கி வாசிக்கவேண்டியவை — நாஞ்சில் நாடன் பரிந்துரை (விகடனில்)

அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.

’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’

எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.

” — http://nanjilnadan.wordpress.com/

சங்கப்பலகை -

Tamil Magazines & Books Online Store

இதற்கே

தமிழ் சார்ந்த எழுத்துலகில் இணையத்தில் கிடைப்பதில், ஒழிகையில் நான் வாசிக்க, விவாதிக்க உகந்தவை என்பவைகளின் சுருக்கங்கள், சுட்டிகள்; மேற்கோள்கள், மேலோட்டங்கள்.

என் விரிவான கட்டுரைகள் அ(றி)வியல் தளத்தில்…