தமிழ் சார்ந்த எழுத்துலகில், பிரதானமாக இணையத்தில் கிடைப்பதில், ஒழிகையில் நான் வாசிக்க, விவாதிக்க உகந்தவை என்பவைகளின் சுருக்கங்கள், சுட்டிகள்; மேற்கோள்கள், மேலோட்டங்கள்.
என் விரிவான கட்டுரைகள் அ(றி)வியல் தளத்தில்...
துறை சார்ந்த சமாளிப்பு என்பது ஒன்று; இந்தத் துறை சார்ந்த வல்லமை என்பது மற்றொன்று. பெரும்பாலும் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் - அது வைத்தியமாக இருக்கலாம், அல்லது பொறியியலாக இருக்கலாம் - அல்லது வணிகமாக இருக்கலாம் அல்லது சட்டமாக இருக்கலாம் - அந்த துறையைச் சேர்ந்தவர்கள் அதிக அளவுக்கு அந்தந்த துறையைச் சார்ந்த உத்திகள், பந்தாக்கள், சொற்றொடர்கள் ஆகியவற்றைக் கற்று, அதில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர் போன்ற பாவனையைப் பிறரிடம் உருவாக்கி அதன் மூலம் வாழ்க்கையைச் சமாளித்துக் கொண்டிருக்கக்கூடிய கோலத்தைத்தான் அதிக அளவில் பார்க்க முடிகிறது.
அழியாச் சுடர்கள்: ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை-சுந்தர ராமசாமி
முக்கியமான பேட்டி/உரையாடல்; தமிழர் தழ்வுமனப்பான்மை, தமிழ் எழுத்து, எழுத்தாளன், துறை வல்லமை என பல விஷயங்களை பற்றி அருமையான விளக்கங்கள் வாதங்கள்.


